பகவத் கீதை

वृष्णीनां वासुदेवोऽस्मि पाण्डवानां धनञ्जयः । मुनीनामप्‍यहं व्यासः कवीनामुशना कविः ॥ ३७॥
வ்ருஷ்ணீநாம் வாசுதேவோஸ்மி பாண்டவா நாம் தநஞ்ஜய: |
மூநீநாப்மயஹம் வ்யாஸ: கவீநாம்உசநாகவி: ||       10.37

நான் எப்போதும் ஸஞ்சரிக்கும் காற்று; வில்லாளிக்குள் சிறந்த ராமன்; மீன்களுக்குள் மகரம், ஆறுகளில் கங்கை.

எல்லாப் பொருள்களையும் படைத்தல், காத்தல், அழித்தலுக்கும் நானே காரணமாயிருக்கிறேன். அறிவில் ஜீவாத்மா; பரமாத்மாவை பற்றிய சிறந்த அறிவும் நானே, உண்மையை அறியச் செய்யும் ஆராய்ச்சியும் நானே.

எழுத்துக்களில் ‘அ' காரமாகவும், சொற்களில் சமாசமாகவும் (சேர்க்கை), அழிவில்லாத முக்காலத்திலும் படைக்கும் நான்முகக் கடவுளாகவும் நானிருக்கிறேன். உயிர்களைக் கொண்டு போகும் யமன், வஸ்துக்களின் உற்பத்தி, பெண்களுக்குள் மஹாலக்ஷ்மி, வாக்கு தேவி சரஸ்வதி, பொறுமைக் கடலான பூமிதேவி அனைத்தும் நானே; மறவாத நல்ல நினைவும் நல்ல புத்தியும் நானே.

ஸாம வேதத்தின் ‘ப்ருஹத' என்னும் பாகம் நான். சந்தஸ்களில் காயத்ரி நான். மாதங்களில் மார்கழி நான், ருதுக்களில் வசந்தம் நான்.

மோசம் செய்யும் சூதாட்டமும் நானே, மனிதர்களுக்குள்ள தேஜஸ்ஸும், நற்செயலும், நிச்சய புத்தியும், தயாள குணமும் நானே.

அர்ஜுன! வ்ருஷ்ணி வம்சத்தில் வாசுதேவரின் குமாரனான கண்ணன் நான்; உண்மையை அறிவதில் வ்யாஸராகவும், நீதி சாஸ்திரத்தில் சுக்ராசார்யராகவும் நான் விளங்குகிறேன்.

குற்றம் செய்பவரை தண்டிப்பவனும் போரில் வெற்றி கொடுப்பவனும் நான்; மறைக்க வேண்டியவைகளை மறைத்துவைக்கும் ரஹஸ்யமும், உயர்ந்த சுகத்தைத் தரும் அறிவும் நானே.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top