கீதார்த்தசங்க்ரஹம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
பகவத் யாமுநாசார்யர் அருளிய கீதார்த்த ஸங்க்ரஹம்
[ஸ்ரீ சுதர்சனர் எழுதிய பதவுரை]

यामुनाचार्य तनियन्
यत्पदाम्भोरुहद्यानविध्वस्ताशेषकल्मषः।
वस्तुतामुपयातोऽहं यामुनेयं नमामि तम् ॥

ஆளவந்தார் தனியன்
யத்பதா3ம்போ4ருஹத்4யாந வித்4வஸ்தாஶேஷ கல்மஷ: |
வஸ்துதா முபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் ||

स्वधर्मज्ञानवैराग्यसाध्यभत्येकगोचरः ।
नारायणः परं ब्रह्म गीताशास्त्र समीरितः ॥ १-1 ॥

ஸ்வத4ர்ம ஜ்ஞாந வைராக்3ய ஸாத்4ய ப4க்த்யேக கோ3சர: நாராயண: பரம் ப்3ரஹ்ம கீ3தாஶாஸ்த்ரே ஸமீரித: || 1 ||

ஸ்வதர்ம ஜ்ஞாநவைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர:

தன் (வர்ணாச்ரம) தர்மரூபமாயிருக்கும் கர்மயோகத்தாலும், ஞானயோகத்தாலும், இதரவிஷயங்களில் பற்றின்மையாலும் உண்டாகும் பக்தியொன்றுக்கே விஷயமாகுமவனாய்,

பரம் ப்ரஹ்ம

பரப்ரஹ்மமான,

நாராயண:

நாராயணன்

கீதாஶாஸ்த்ரே

கீதையாகிற சாஸ்திரத்தில்

ஸமீரித:

அறிவிக்கப்பட்டுள்ளான்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top