பகவத் கீதை வெண்பா

புதுக் கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன: திவ்யப் ப்ரபந்தத்தின் முன்னுரை, பெரிய திருமொழி முதற்பத்து விளக்கவுரைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. புதுக் கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன: திவ்யப் ப்ரபந்தத்தின் முன்னுரை, பெரிய திருமொழி முதற்பத்து விளக்கவுரைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

கீதையைப்பற்றி ரிஷி வாக்கு

ஸர்வோபநிஷதோ3 கா3வ தோ3க்3தா4 கோ3பாலநந்த3ந: |
பார்த்தோ2 வத்ஸ: ஸுதீ4ர் போ4க்தா து3க்3த4ம் கீ3தாம்ருதம் மஹத் ||
எல்லா உபனிஷத்துக்களுமே பசுக்களாகும். அவற்றைக் கறப்பவன் ஆய்ப்பிள்ளையான கண்ணன், அர்ஜுனன் கன்றாயிருப்பவன். ஞானியே அப்பாலைப் பருகுமவன். சிறந்த கீதையாகிற அமுதமே பாலாகும்.

கீதையைப்பற்றித் திருமழிசைப்பிரான்

சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்
ஆயன் துவரைக்கோனாய் நின்ற – மாயன் அன்று
ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில்
ஏதிலராம் மெய்ஞ்ஞான மில்.
[நான்முகன் திருவந்தாதி திருமொழி – 8-1 (2452)]
(ஸ்ரீகிருஷ்ணனென்கிற) சிறு பிள்ளையாய்க் கொண்டு ஸுலபனாயும் (அந்நிலையிலேயே) மிகவும் பெரியவனாய்க்கொண்டு எட்டாதவனாயும் (இவ்விரண்டு படிகளுக்கும் உதாரணமாக) இடைப்பிள்ளையாய்ப் பிறந்த சிறுமையையுடையனாயும் த்வாரகாபுரிக்குத் தலைவனாய் நின்ற பெருமேன்மையை யுடையவனாயு மிகுந்த எம்பெருமான் (பாரதயுத்தம் நடந்த) அக்காலத்தில் (திருத்தேர்த்தட்டில் அர்ஜுநனைக் குறித்து) அருளிச்செய்த (சரமச்லோகமாகிய) அந்தத் திரு வாக்கை அதிகரிக்கப் பெறாதவர்கள் தத்துவவுணர்ச்சியற்ற பகவத் விரோதிகளாவர்.

கீதையைப்பற்றி நம்மாழ்வார்

அறிவினால் குறைவில்லா அகல்ஞாலத் தவரறிய,
நெறியெல்ல மெடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி,
குறியமாண் உருவாகிக் கொடுங்கோளால் நிலங்கொண்ட,
கிறியம்மான் கவராத கிளரொளியால் குறைவிலமே.
[திருவாய்மொழி,திருவாய்மொழி நான்காம் பத்து (ஏராளும்) 4-8-6 (3313)]
‘நமக்கு அறிவு இல்லையே!’ என்ற குறைபடமாட்டாத விரிவான நிலவுலகி லுள்ளாரனைவரும் அறியும்படியாக (கருமயோகம் முதலிய) ஸகலோபாயங்களையும் ஸாரமாக வெடுத்தருளிச்செய்த பரிபூர்ண ஞானத்தையுடைய விலக்ஷணஸ்வாமியாய், வாமந ப்ரஹ்மசாரி வேஷத்தையுடையனாய் (மாவலியை வஞ்சிக்கையாகிற) கொடியவழியினால் பூமியைத் தன்னதாக்கிக் கொண்ட உபாஜ்ஞனான எம்பெருமான் விரும்பாத மிகுந்த லாவண்யத்தில் விருப்பமுடையோமல்லோம்.
Scroll to Top