பகவத் கீதை

श्रेयो हि ज्ञानमभ्यासाज्ज्ञानाद्वयानं विशिष्यते ।
ध्यानात्कर्मफलत्यागस्त्यागाच्छान्तिरनन्तरम् ॥ १२॥

ச்ரேயோ ஹி ஜ்ஞாநம் அப்யாஸாத் ஜ்ஞாநாத் த்யானம் விசிஷ்யதே |
த்யாநாத் கர்மபலத்யாக: த்யாகாத் சாந்திரநந்தரம் ||        12.12

பகவத் த்யானத்தின் அப்யாஸத்தைவிட ஆத்ம தரிசனம் சிறந்தது; ஆத்ம தரிசனத்தைக் காட்டிலும் ஆத்ம சிந்தனம் சிறந்தது, ஆத்ம சிந்தனையைவிட கர்மபலத்யாகம் மேன்பட்டது. கர்மபலத் தியாகத்தினால் மனச்சாந்தி உண்டாகிறது.

ஸர்வ கர்ம பலத்தியாகமே ஆத்ம சிந்தனத்திற்கு உபாயம். ஆத்ம சிந்தனமே ஆத்ம தரிசனத்திற்கு உபாயம். ஆத்ம தரிசனமே பகவத் த்யான அப்யாசத்திற்கு உபாயம். இப்படியிருக்க இதில் கிருஷ்ணன் உபாயத்தை மேன்பட்டதாவும், அதனால் உண்டாகும் பலனைத் தாழ்ந்ததாகவும் சொல்வதின் கருத்தென்ன?

பித்தரோகிக்குப் பால் கசக்குமாப்போல பகவத் த்யானம் செய்யத் தகுதியற்றவனுக்கு அதைச் செய்வது கடினமாயிருக்கும். அதில் அவனுக்கு ருசியிராது, இப்படிப்பட்டவனுக்கு பகவத் த்யானத்தை விட ஆத்ம தரிசனமே மேலானது.

இதே போல, ஜீவாத்ம தரிசனம் பெற சக்தியற்றவனுக்கு ஜீவாத்ம த்யானமே சிறந்தது. ஜீவாத்ம சிந்தனம் செய்யத் தகுதி யற்றவனுக்கு ஸர்வகர்ம பலத்யாகமே மேன்பட்டது, இப்படி பலத்யாகத்தோடு கர்மாவை செய்பவனுக்கு எதிலும் ஆசையற்றவனாகையால் மனச்சாந்தி உண்டாகும் என்பதே இந்த சுலோகத்தின் பொருள்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top