பகவத் கீதை

अद्वेष्टा सर्वभूतानां मैत्रः करुण एव च ।
निर्ममो निरहङ्काराः समदुःखसुखः क्षमी || १३ ||

அத்வேஷ்டா ஸர்வபூதாநாம் மைத்ரா: கருண ஏவ ச |
நிர்மமோ நிரஹங்கார: ஸமதுக்கஸுக: க்ஷமீ ||         12.13

இதிலிருந்து சில சுலோகங்களில் பகவானுக்கு பிரியமாவன் எவன் என்பதைக் கூறுகிறான்

எல்லா உயிர்களிடத்தும் த்வேஷம் (வெறுப்பு) இல்லாமல், அவைகளிடம் நட்பும் கருணையுமுள்ளவனாக இருப்பவன், அஹங்கார மமகாரமற்று சுக துக்கங்களை ஸமமாகக் கருதுபவன், பொறுமை உடையவன், சந்தோஷமாக இருப்பவன், ஸர்வேச்வரனே மேற்பட்டவன் என்கிற நிச்சயபுத்தி உள்ளவன் இவ்வாறு இருந்து தன் புத்தி இவைகளை நிலையாக என்னிடமே வைத்து எவன் என்னிடம் பக்தியைச் செய்கிறானோ, அவனே எனக்குப் பிரியன்.

அத்வேஷ்டா ஸர்வ பூதானாம்: தன்னை ஒருவன் சொல்லத்தகாத வார்த்தையைச் சொன்னாலும், தனக்குக் கெடுதலே செய்தாலும், அவனிடமும் இப்படியே எல்லோரிடமும், வேஷமோ வெறுப்போ கூடாது.

மைத்ர: கருண ஸர்வபூதானாம் - எல்லா ஜீவன்களும் பகவத் விபூதி; அவனுடைய சொத்து என்பதைத் தெரிந்து அவைகளிடம் நண்பனாகவும், கருணையுள்ளவனாகவும் இருக்க வேண்டும்.

நிர்மமோ நிர்அஹங்கார: "யானும் நீ; என் உடைமையும் நீயே" என்கிறபடி தானும், தன்னுடமையும், பகவானுக்கு உரியவை என்பதை அறிந்து, அஹங்கார மமகாரமற்று இருத்தல் வேண்டும்.

ஸம துக்கே சுகம் க்ஷம - சுகம் வந்தாலும் துக்கம் வந்தாலும் எல்லாம் நம் வினைப்பயனுக்குச் சேர வந்து போகின்றன என்பதை அறிந்து, இரண்டையும் சமமாகக் கொண்டு பொறுமை உள்ளவனாக இருத்தல் வேண்டும்.

ஸந்துஷ்ட: கிடைத்ததைக் கொண்டு திருப்தியுள்ளவனாக யிருக்க வேண்டும் பகவத் பக்தன்.

யதாத்மா - த்ருட நிச்சய: விஷயங்களிலிருந்து மனத்தை அடக்கினவனாய் வேதத்தில் சொல்லப்பட்ட வாசுதேவன் ஒருவனே பரதத்வம் என்கிற நிச்சய புத்தியுடையவனாய்,

மய்யர்ப்பித மனோ புத்தி: என்னிடம் தன் மனத்தையும் புத்தியையும் நிலையாக வைத்துள்ள,

யோமத்பக்த: ஸமேப்ரிய: இப்படிப்பட்ட என் பக்தன் எனக்குப் பிரியமானவன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top