பகவத் கீதை

दिवि सूर्यसहस्रस्य भवेद्युगपदुत्थिता ।
यदि भास्‍सदृशी सा स्याद्भासस्तस्य महात्मनः ॥ १२ ॥
திவி ஸூர்யஸஹஸ்ரஸ்ய பவேத் யுகபத் உத்திதா |
யதி பா: ஸத்ருசீ ஸா ஸ்யாத் பாஸஸ்தஸ்ய மஹாத்மந: ||     11.12

வானத்தில் ஆயிரம் சூரியர்கள் சேர்ந்து உதித்தால் எவ்வளவு ஒளிமிக்கதாயிருக்குமோ அதற்கு ஒருவாறு ஒப்பிடலாம் அந்த விச்வ ரூபத்தின் தேஜஸ்.

அப்பொழுது அர்ஜுனன் அந்த தேவ தேவனுடைய விச்வ ரூபத்தில் பலவிதமான ஜகத் முழுவதையும் ஒன்று சேர்ந்திருப்பதைக் கண்டான்.

வேற்றுமையில் ஒற்றுமை இயற்கையானது. ப்ரஹ்மா முதல் ஈ எறும்பு வரையில் உள்ள பலவகை உயிர் இனங்களும், மண் உலகு, கீழ் உலகு, மேல் உலகங்களான இன்ப இடங்களும் இன்பப் பொருள்கள் எல்லாம் இறைவனிடம் ஒன்றுகூடி அடங்கியிருந்தன. இதைக் கண்ட அர்ஜுனன் வியப்புடையவனாய் மயிர்ச் செறிந்து பகவானைத் தலையால் வணங்கி கூப்பிய கைகளுடன் பின்வருமாறு கூறினான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top