பகவத் கீதை

त्वमादिदेवः पुरुषः पुराणस्त्वमस्य विश्वस्य परं निधानम् ।
वेत्ता‍ऽसि वेद्यं च परं च धाम त्वया ततं विश्वमनन्तरूप ॥ ३८॥
த்வம் ஆதிதேவ: புருஷ: புராண: த்வமஸ்ய விச்வஸ்ய பரம் நிதாநம் |
வேத்தாஸி வேத்யஞ்ச பரஞ்ச தாம த்வயா ததம் விச்வம் அனந்தரூப ||     11.38

மஹாத்மாவே! அந்தமில்லாதவரே ! தேவேசா! ஜகந்நிவாசா, முதலாக நான்முகப்ரஹ்மாவை படைத்தவனன்றோ நீர், இப்படி முதல் தனி வித்தான (மூலகாரணமான) உம்மை எவர்கள் தான் வணங்காமலிருப்பர்; எல்லோரும் நமஸ்கரிப்பர்; ஸத் அஸத் இரண்டிற்கும் மேற்பட்டவர் நீர்; அதாவது (அழிவில்லாத ஜீவாத்மாவுக்கும், காரணமான மூல ப்ரக்ருதிக்கும் காரியமான ஜகத்திற்கும் மேற்பட்ட அழிவில்லாதவர் நீர்.

எண்ணில்லாத வடிவங்களை உடையவரே! முதற்முதல் கடவுளே! ஆதிபுருஷனும் நீரே! புருஷோத்தமன் நீர். உலகுக்கெல்லாம் மேலான இருப்பிடமும் நீரேயாவீர். அறிபவனும் நீர், அறியப்படும் பொருளும் நீரே, அருட்பெரும் செல்வமும் நீரே உம்மால் உலகம் யாவையும் பரந்துள்ளது.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top