உலகையெல்லாம் தரித்து நியமித்தும், அவைகளுக்கு காரண மாயுமுள்ள காண அரிய என் விச்வரூபத்தை (என் அருளினால்) நீ பார்த்தாய். இந்த ரூபத்தை தரிசிக்க தேவர்களும் எப்போதும் விரும்புகிறார்கள்.
மனிதர்களைக் காட்டிலும் அதிகமான அறிவு, ஆற்றல் பெற்றவர்கள் தேவர்கள், அவர்களும் இந்த ரூபத்தை காணக் கிடைக்காமல் அதைப் பார்க்க வேண்டுமென்று எப்போதும் இச்சித்துக் கொண் டிருக்கிறார்கள்.