எல்லோருடைய உள்ளத்தில் இருப்பவன் நான். ஜீவனின் நினைவு, மறதி, அறிவு ஆகியவை என் அதீனம். வேதங்களால் அறியப்படுபவனும் நானே. வேதங்களை நன்றாக அறிந்தவனும் நானே! அவைகளில் சொல்லப்படும் பலன்களைக் கொடுப்பவனும் நான்தான்; (புலன்களினாலும், போகம், சாஸ்திரம் இவைகளைக் கொண்டும். ஏற்படும் ஞானமே அறிவு : முன் நடந்தவைகளைப் பற்றிய அறிவு நினைவு; அறிவு இருந்தும் அது மனத்தில் தோன்றாமை மறதி).
இதற்கு மேல் மூன்று சுலோகங்களினால் புருஷோத்தம வித்யை புருஷோத்தமனான பகவானின் மேன்மையைச் சொல்லுகிறான்.