பகவத் கீதை வெண்பா கரும விடுமறிவுங் கண்ணவதற் பின்னுமொருமையுடன் யோகு முரைத்தி-யிருமையிலுமொன்றுரைப்பா யென்றுரைத்தான் பார்த்தனுயரிறையும் நின்றுரைத்தா னிச்சயத்தை நேர்ந்து. 5.1 கண்ண! கண்ணனே! கரும விடும் அறிவும் கர்ம யோகத்தை விட்டுச்செய்யும் ஜ்ஞாநயோகமே சிறந்த தென்றும் அதன் பின்னும் அதற்குப் பின்னும் ஒருமையுடன் யோகும் கர்மயோகமே ஒப்பற்றது என்றும் உரைத்தி கூறுகிறாய் இருமையிலும் இவ்விரண்டினுள்ளும் ஒன்று உரைப்பாய் (எனக்குச் சிறந்தது) ஒன்றை உரைப்பாய் என்று என்று பார்த்தன் அர்ஜுனன் உரைத்தான் – கேட்டான் உயர் இறையும் அனைவரிலும் உயர்ந்த ஸர்வேஸ்வரனும் நிச்சயத்தை நேர்ந்து நின்ற (அர்ஜுனனுக்குச் சிறந்தது எது எனும்) நிச்சயத்தை முடிவுகட்டி உரைத்தான் கூறலானான். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0