பகவத் கீதை வெண்பா இக்கரும யோகமது விட்டுணர்வா மிவ்விரண்டும் தக்கநலஞ் சாதிக்குஞ் சாதனமா-மக்கருமம் விட்டிய றன்னின் மிகநன் றுதன்செயலிற பட்டியலு மாறு பயினறு. 5.2 இக்கருமயோகம் இத்தகைய கர்மயோகம் அதுவிட்டு உணர்வாம் இவ்விரண்டும அதைவிட்டுச் செய்யப்படும் ஞானயோகம் ஆகிய இவ்விரண்டுமே தக்க நலம் சாதிக்கும் சாதனமாம் நலல புருஷார்த்தமான ஆத்மஸாக்ஷாத்காரத்தை நேரே உண்டாக்கும் உபாயமாகும் (ஆயினும்) அக்கருமம் விட்டு இயல் தன்னில் அக்கருமயோகத்தை விட்டுச் செய்யும் ஞானயோகத்தைக் காட்டிலும் தன் செயலில்பட்டு பயின்று இயலும் ஆறு தனக்குரிய கர்மங்களில் ஈடுபட்டுப் பழகி அநுஷ்டிக்கும் உபாயமான கர்மயோகம் மிக நன்று (சில காரணங்களால்) மிகச்சிறப்புற்றதாகும். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0