பகவத் கீதை வெண்பா

ஆங்கொருவன் றீவினையு நல்வினை யும்பெரியோன்
பாங்கினிற் றான்வாங்கும் பண்பிலனா-லீங்கறிவு
மாய வினையான் மறைந்தன்று மோகததி
லாய வுயிர்க ளவை     5.14

பெரியோன்

பல இடங்களில் பரவக்கூடிய இந்த ஜீவன்

ஆங்கு

(தனக்கு வேண்டியவர்களாகவும் வேண்டாதவர்களாகவும் நினைக்கப்படுமவர்கள் நிறைந்த) உலகில்

ஒருவன் தீவினையும்

(வேண்டியவனாக நினைக்கப்படும்) ஒருவனுடைய துக்கத்தையும்

(ஒருவன்) நல்வினையும

( வேண்டாதவனாக நினைக்கப்படும்) ஒருவனுடைய ஸுகத்தையும்

தான் பாங்கினில் வாங்கும் பண்பு இலனால்

தான் பக்குவமாகப் போக்கும் தன்மையை உடையவனல்லன்

ஈங்கு

இவ்வுலகில்

அறிவு

(ஜீவனுடைய) அறிவு

மாயவினையால்

ஆச்சர்யமான புண்யபாபங்களால்

மறைந்தன்று – மறைக்கப்பட்டுள்ளது

அவை

அப்புண்யபாப கர்மங்களால்

உயிர்கள்

(தேவர் முதலான சரீரங்களிலுள்ள) ஜீவர்கள்

மோகத்தில் ஆய

(தேஹாத்ம மயக்கம் முதலான) மயக்கங்களில் ஆழ்ந்துள்ளன

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top