பகவத் கீதை வெண்பா தொக்கமரிப் பூதமெலாந் தோன்றித்தோன் றித்தொடர மிக்கவச மாயிரவில் வீயுமே – தக்கபகல் என்றுவருங் காலத் திவையுண்டா மென்பதனா லொன்றுநிலை தன்னையுறா துற்று. 8.18 தொக்கு அமர் இப்பூதம் எலாம் சேர்ந்திருக்கும் இந்த ஜீவராசிகள் அனைத்தும் தொடரமிக்கு அவசமாய் தொடர்ந்து மிகவும் கர்மவயப்பட்டதாய் தோன்றி தோன்றி (பகலில்) உண்டாகி உண்டாகி இரவில் வீயுமே இரவுப்போதில் அழிந்துவிடும் தக்க பகல் என்று வரும் காலத்து இவை உண்டாம் (மறுபடியும்) பகற்காலத்தில் இவை உண்டாகின்றன என்பதனால் இக்காரணத்தால் ஒன்றும் உற்று றிலை தன்னை உறாது ஒரு பொருளும் உள்ளபடி நிலையான தன்மையை அடைவதில்லை Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0