பகவத் கீதை வெண்பா

தன்னகத்துப் பூதங்க ளெல்லாந் தகவிருத்தி 
யன்னவற்றிற் றான்பரந்தே யாங்கமைந்து – மன்னியசீர்
அந்தப் பரம்புருட னன்பா லனன்னியமாஞ்
சிந்தைக் குறவெளியன் சேர்ந்து.            8.21

பூதங்கள் எல்லாம் தன் அகத்து தகவு இருத்தி

எல்லாப் பொருள்களையும் தன்னிடம் பொருந்தியிருக்கச் செய்து

அன்னவற்றில்

அந்தப் பொருள்களிடம்

தான் பரந்தே அமைந்து

தான் வியாபித்து நின்று

ஆங்கு மன்னிய சீர்

அப்படி வியாபித்தபோதிலும் பெருமை பெற்றிருக்கும்

அந்தப் பரம்புருடன்

அந்தப் பரமபுருஷன்

சிந்தைக்கு அனன்னியமாம் அன்பால்

நெஞ்சில் வேறு பயன் கருதாத பக்தியினால்

சேர்ந்து உற எளியன்

அடைவதற்கு எளியவனாகிறான் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top