பகவத் கீதை வெண்பா யாதுவழி செல்லுங்கால் யோகியர்கண் மீளார்கள் யாதுசெல்லுங் கான்மீள்வ ரிவ்வுலகின் – மீதமைந்த வவ்வழிக டாமிரண்டு மாங்குனக்குச் சொல்லுகே னிவ்வழியிற் கேளா யிது. 8.22 யோகியர்கள் யோகிகள் யாது வழி செல்லுங்கால் எந்த (அர்ச்சிராதி ) மார்க்கத்தின் வழியாகச் செல்லும் போது மீளார்கள் (ஸம்ஸார மண்டலத்திற்கு) மீண்டு வரமாட்டார்களோ யாது செல்லுங்கால் எந்த (தூமாதி ) மார்க்கத்தின் வழியாகச் செல்லும்போது மீள்வர் (இந்த ஸம்ஸார மண்ட லத்திற்கே) மறுபடியும் வருவார்களோ இவ்வுலகின்மீது அமைந்த இந்த உலகத்திலே அமைந்திருக்கும் அவ்வழிகள் தாம் இரண்டும் அந்த இரண்டு மார்க்கங்களையும் ஆங்கு இவ்விடத்தில் உனக்குச் சொல்லுகேன் உனக்குச் சொல்லுகின்றேன் இது இவ்வழிகள் இரண்டையும் இவ்வழியில் கேளாய் நான் சொல்ல நீ கேட்பாயாக Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0