பகவத் கீதை வெண்பா இவ்வழிக டானறிந்த யோகியவன் பார்த்தனே! யெவ்வழியு மோகத் திடையணையான் – அவ்வழியாற் கால மனைத்திலுநீ காதலால் யோகத்தை யேல முயல்கண்டா யிங்கு. 8.26 பார்த்தனே அர்ஜுனா! இவ்வழிகள்தான் அறிந்த யோகி அவன் இந்த அர்ச்சிராதி தூமாதி மார்க்கங்களை அறிந்த எந்த ஞானியும் எவ்வழியும் ப்ரயாணகாலத்திலும் மோகத்திடை அணையான் மயங்கமாட்டான் அவ்வழியால் ஆகையாலே காலம் அனைத்திலும் தினந்தோறும் நீ நீ காதலால் ஆர்வத்தோடு யோகத்தை ஏல (இந்த அர்ச்சிராதிகதியைச் சிந்திப்பதாகிற) தியானத்தை ஏற்றுக்கொள்ள இங்கு ஸாதநதஸையான இப்போதே முயல்கண்டாய் முயற்சிசெய்வாயாக Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0