பகவத் கீதை வெண்பா

பத்திரமும் பூவும் பழமும் புனலுமெனக்
கொத்தியலும் பத்தி யுடனுதவி—சுத்திய
தூமனத்தான் றந்ததனைத் துயப்பனவ னப்பத்தி
யாமனதத தென்று நானார்ந்து.       9.26

பத்திரமும்

இலையையாவது

பூவும்

பூவையாவது

பழமும்

பழத்தையாவது

புனலும்

நீரையாவது

எனக்கு ஒத்து இயலும் பத்தியுடன் உதவி

எனக்குத் தகுதியாகச் செய்யப்படும் அன்போடு ஸமர்ப்பித்து

சுத்திய தூமனத்தான அவன்

நினைவில் ஸுத்தியோடு கூடிய தூயநெஞ்சையுடையவன்

தந்ததனை

அளித்த பொருளை

நான்

நான்

அப்பத்தியாம் மனத்ததென்று

அத்தகைய பக்தியோடு கூடிய நெஞ்சினால் அளிக்கப்பட்டதென்று

ஆர்ந்து துயப்பன்

ஆசையோடு உண்பேன் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top