பகவத் கீதை வெண்பா யாவா்க்கு மொப்பனா னென்றனக்கி யாரிடத்து மேவுவெறுப் போருகப்பு மிக்கில்லை-யாவரெனை யன்பதனா லேயடைவா ராங்கவரென் பாலவா்பா லின்பதனா லேயிருப்பன யான். 9.29 யாவர்க்கும் பலவகைப்பட்டிருக்கும் எல்லா ஜீவராஸிகள் விஷயத்திலும் நான் நான் ஒப்பன (என்னை ஆஸ்ரயிக்கும் விஷயத்தில்) ஸமமாயிருப்பவன் என்றனக்கு எனக்கு யாரிடத்தும் மேவு வெறுப்பு (தாழ்ந்தவன் என்னும் காரணத்தால) ஆஸ்ரயிக்கத்தகாதவன் இவன் என்னும் த்வேஷமோ ஓர் உகப்பு (உயர்ந்தவன் என்னும் காரணத்தால்) இவன் ஆஸ்ரயிக்கத்தக்கவன் என்னும் ப்ரீதியோ மிக்கு இல்லை அடியோடு கிடையாது யாவர் எவர்கள் எனை என்னிடம அன்பதனாலே அடைவார் பக்தியையே பயனாகக்கொண்டு அன்பு செய்கிறார்களோ ஆங்கவர் அவர்கள் என்பால் என்னிடததில் வாழ்கிறார்கள் யான் நான் அவர்பால் அவர்களிடத்தில் இன்பதனாலே இருப்பன் ( என்னிலும உயர்ந்தவர்களிடத்திற்போலே) இன்புற்று வாழ்கிறேன் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0