பகவத் கீதை வெண்பா

என்னலஞ்செய் தென்மனனா யெனனையிறைஞ் சென்னைவணங் 
கென்னலஞ்சோ்ந் துன்னையெழில் யோகத்தின-மன்னவமைத் 
தென்பற்றே நீபயனா வேயந்தநீ யென்னையே 
வனபற்றாய் வந்தடைதி வாய்ந்து.       9.34

என் நலம் செய்து

என்னிடம் அன்பு பூண்டவனாய் 

என் மனனாய

என்னிடம் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தி

எனனை இறைஞ்சு

என்னை ஆராதிப்பாயாக

வணங்கு

என்னை வணங்குவாயாக

என் பறறே மீபயனா ஏய்ந்த நீ

எனனைப் பற்றியிருப்பதையே மேலான பயனாகக் கொண்டிருக்கும் நீ

உன்னை

உன்னை

என் நலம் சோந்து எழிலயோகத்தின்

என்னிடம பக்தியோடே சோ்ந்து அழகியதாயிருக்கும் பக்தியோகத்தில்

மனன அமைத்து

நிலையாக ஈடுபடுத்தி

என்னையே வன்பற்றாய்

என்னையே வலிய ஆஸ்ரயமாகக்கொண்டு

வாய்ந்து வ்நதடைதி

பொருந்தி வந்தடைவாய் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top