பகவத் கீதை வெண்பா

ஆதி யிலனா யயனா மெனையுலகின்
மீதறியு மீசனா மெய்யறிவோன் – றீதின்
மதிக்கலக்க மற்றவவன் மானிடரிற் பாவக்
கதிக்கலப்பெல் லாங்கழிந்தான் காண்.        10.3

ஆதி இலனாய அயனாம்

பிறப்பற்றவனாகவும், (அதிலும்) அனாதிகாலமாகப் பிறப்பற்றவனாகவும்

உலகின் மீதறியும் ஈசனாம்

உலகில் ஈஶ்வரர்களாயிருப்பவர்களுக்கும் ஈசனாக அறியப்படும்

எனை

என்னை

மானிடரில்

மனிதர்களுக்குள்ளே

மெய்யறிவோன்

உள்ளபடி அறிகிறவனாய்

தீதில் மதிக்கலக்கமற்ற அவன்

தீதற்ற அறிவிலே என்னையும், மற்றவர்களையும் ஒன்றாக மயங்கும் கலக்கமற்றவனான அவன்

பாவக் கதிக்கலப்பு எல்லாம் கழிந்தான் காண்

(எனது பக்தி உண்டாவதற்கு விரோதியாகக்) கலந்து நிற்கும் பாவங்களனைத்தும் கழியப்பெற்றவனாவான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top