பகவத் கீதை வெண்பா

ஆங்கவர்க்கே சால வனுகம்பை மேவியே
யோங்கிவளர் ஞான வொளிவிளக்காற் – பாங்காக
நெஞ்சகத்தே நின்றுநா னேரே மதிமயக்கும்
வஞ்சவிருண் மாய்ப்பன் மகிழ்ந்து.      10.11

ஆங்கு அவர்க்கே

அந்த ஸ்வயம் ப்ரயோஜன பக்தி நிஷ்டர்களிடம்

சால அனுகம்பை மேவியே

பேரருளாலேயே

பாங்காக நெஞ்சகத்தே நின்று

அவர்களுடைய நெஞ்சுக்கு விஷயமானவனாய் (எனது கலயாணகுணங்களை வெளிப்படுத்தி)

ஓஙகி வளர் ஞான ஒளி விளக்கால்

என் விஷயமான ஜ்ஞானமெனும் ஓங்கிவளரும் ஒளிமிக்க விளக்காலே

நேரே மதிமயக்கும் வஞ்ச இருள்

ஜ்ஞானத்துக்கு விரோதியான பண்டை வினைகளால் உண்டான (ஶப்தாதி, விஷயப்ராவண்யமாகிற) அறிவை மயக்கும் இருளை

நான் மகிழ்ந்து மாய்ப்பன்

நான் உகப்புடன் அழிப்பேன்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top