பகவத் கீதை வெண்பா மன்னியசீர் யாத வரில்வாசு தேவனான் பன்னியசீர்ப் பாண்டவரி னீயுநான் – தன்னிகரில் முன்னும் வியாதன் முனிவரினான் முற்கவிகட் குன்னு கவியுசனா வுற்று. 10.38 மன்னியசீர் யாதவரில் நிலைநின்ற சிறப்பையுடைய யாதவர்களுக்குள், வாசுதேவன் நான் வாஸுதேவன் நானே; பன்னியசீர் பாண்டவரில் புகழப்படும் குணங்களையுடைய பாண்டவர்களுக்குள், நீயும் அர்ஜுனனாகிற நீயும், நான் நானே முனிவரில் முனிவர்களுக்குள் தன்னிகரில் முன்னும் வியாதன் நான் ஒப்பற்ற மனன ஶீலரான வியாஸமுனிவர் நானே முன் கவிகட்கு பழைய கவிகளுக்குள் உற்று உன்னு உசனாகவி நான் உற்றுணரும் ஶுக்ராசார்யராகிற கவி நானே. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0