பகவத் கீதை வெண்பா

தாந்தீமை செய்வாரைத் தண்டிப்பார் தண்டநான்
வேந்தமர்வெல் வார்கட்கு ணீதிநா – னாய்ந்தமைந்த
மௌனநான் றானே மறைப்பவற்றில் ஞானியர்தம்
ஞானநான் றானே நயந்து.      10.39

தாம் தீமை செய்வாரை

தாமே தீய செயல்களைச் செய்கின்றவர்களை

தண்டிப்பார்

தண்டிப்பவர்களுடைய

தண்டம் நான்

தண்டனை நானே

வேந்து அமர் வெல்வார்கட்கு

அரசர்களைப் போரிலே வெல்கின்றவர்களுடைய

நீதி நான்

(வெல்வதற்குறுப்பான) நீதி நானே

மறைப்பவற்றில்

மறைக்கும் உபாயங்களில்

ஆய்ந்து அமைந்த மௌனம் நான் தானே

ஆராய்ந்து கைக்கொள்ளப்பட்ட மௌனம் நானேயாவேன்

ஞானியர் தம்

அறிவுடையவர்களுடைய

ஞானம்

அறிவு

நயந்து

விருப்பத்துடன்

நான் தானே

நானே ஆகிறேன்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top