பகவத் கீதை வெண்பா

எல்லாப் பொருளுக்கும் யாதுமுதல் வித்தாகு(ம்)
மல்லாருந் தோள்விசையா மற்றதுநா – னல்லாது
மீங்கிதுகே ளென்னை யொழிந்திச் சராசரத்தி
லாங்குளதொன் றில்லை யது.     10.40

மல் ஆரும் தோள் விசையா

மல்லர்களை வெற்றி கொண்ட தோளையுடைய அர்ஜுனா!

எல்லாப் பொருள்களுக்கும்

(உலகிலுள்ள) எல்லாப்பொருள்களுக்கும்

யாது முதல் வித்தாகும்

(ஆங்காங்கு) யாதொன்று உபாதான காரணமாயிருக்கின்றதோ

மற்று அது நான்

அந்தப் பொருள் நானே

அல்லாதும்

மேலும்

ஈங்கு இது கேள்

இங்கு இவ்வார்த்தையைக் கேட்பாயாக

இச்சராசரத்தில்

அசைவனவும் அசையாதனவும் நிறைந்த இப்பொருள்களில்

என்னை ஒழிந்து உனது ஒன்று

என்னைப் பிரிந்திருக்கும் ஒருபொருள் (உண்டோ என்று பார்த்தால்)

ஆங்கு அது இல்லை

அத்தகைய பொருள் இல்லை.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top