பகவத் கீதை வெண்பா ஓடுமவை தம்மி லுயர்பவன னொண்படைசீ ரீடுடையார் தம்மி லிராமன்னா – னீடுவளர் வண்புனன்மீன் றம்மின் மகரநான் யாறுகளில் நன்புனல்சேர் சான்னவியு நான். 10.32 ஓடும் அவை தம்மில் அசையும் இயல்வுடையவற்றுள், உயர் பவனன் நான் சிறப்புற்ற காற்றாகிறேன் நான், ஒண் சீர் படை ஈடு உடையார் தம்மில் ஒளி பொருந்திய சிறப்புடைய ஆயுதத்தை நன்கு ஏந்தியவர்களுக்குள் இராமன் நான் (சக்கரவர்த்தித் திருமகனான) இராமன் நானே நீடு வண்புனல் வளர் மீனதம்மில் நீண்டநாள் கடல் நீரில் வளரும் பெரிய மீன்களுக்குள் மகரம் நான் மகர மீன் நானே யாறுகளில் ஓடும் நதிகளுக்கு நன் புனல் சேர் சாந்நவியும் நான் சிறப்புற்ற நீரையுடைய கங்கையும் நானே Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0