பகவத் கீதை வெண்பா

உண்டா மவற்றுக் குளவாதி யந்தநடு
கண்டாயே பார்த்தா நான் காணிதுதான் – கொண்டாடு
மேலான்ம வித்தைநான் வித்தைகளில் வாதநான்
தூலாக்குந் தார்க்கியரிற் றுப்பு.                         10.33

பார்த்தா

குந்தீபுத்ரனே!

உண்டாமவற்றுக்கு உள

உண்டாகின்ற பொருள்களுக்கு அமைந்த

ஆதி

காரணமான படைப்பவர்களும்

அந்தம்

(அவற்றை) அழிப்பவர்களும்

நடு

இடையில் (அவற்றை) ரக்ஷிப்பவர்களும்

நான் கண்டாயே

நானேயென்பதை அறிவாயாக

வித்தைகளில்

வித்யைகளுக்குள்

கொண்டாடும் மேல் ஆன்மவித்தை இதுதான்

(ஜ்ஞானிகள்) கொண்டாடுகின்ற மேலான, (ஆத்ம பரமாத்மாக்களைப் பற்றிய) ஆத்மவித்யையாகிற இவ்வித்யைதான்

நான்காண்

நானேயாகிறேன்

துப்பு

வலிமையுடைய வாதிகளையும்

தூலாக்கும்

பஞ்சுபோல பறக்கடிக்கும்

தார்க்கியரின்

(ஜல்பம், விதண்டை, வாதம் என்ற மூன்று வகைப்பட்ட வாதங்களைப் புரியும்) தார்க்கியரின் வாத வகைகளுள்

வாதம் நான்

(தத்வ நிர்ணயத்தின் பொருட்டு ஏற்பட்ட) வாதம் நானே

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top