பகவத் கீதை வெண்பா மாயன் பெருமை வகைகேட் டகமகிழ்ந்து தூய விசயனித் தொல்லுலக- மேயவகை காணவிருப் புற்ற கருத்தா ல்வனெஞ்சம் பூணவுரை செய்தான் புகழ்ந்து. 11.1 மாயன் பெருமை வகைகேட்டு மாயனாகிற கண்ணனுடைய பல வகைப்பட்ட பெருமைகளைக் கேட்டு அக மகிழ்ந்து தன் நெஞ்சு மகிழச்சியுற்று தூய விசயன் குற்றமற்ற அர்ஜுனன் இத் தொல் உலகம் மேயவகை காண விருப்புற்ற கருத்தால் பிரத்யக்ஷமாயுள்ள இப்பழமையான உலகம் (கண்ணனின் சரீரத்தில் ) பொருந்தி நிற்கும் வகையை நேரே காண விரும்பிய எண்ணத்தால் அவன் நெஞ்சம பூண் கண்ணனுடைய நெஞ்சத்தில் பொருந்தும்படி புகழ்ந்து உரை செய்தான் கண்ணனைப் புகழ்ந்து பேசலுற்றான் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0