பகவத் கீதை வெண்பா என்பா லிரக்கத்தா லீறா மறைபொருளா நின்பா லறிவமர நீயுரைத்த – வின்பாருஞ் சொல்லாலென் மோகந் துவக்கியுட னில்லாதே யெல்லாங் கழிந்த தெனக்கு. 11.2 என்பால் இரக்கத்தால் எனக்கு அருள்புரிவதற்காகவே, ஈறாம் மறை பொருளாம் மேலான ரஹஸ்யார்த்தமாய், நின் பால் அறிவு அமர உனக்கு ப்ரகாரமான அறிவுமயமான ஆத்மாவைப்பற்றி, நீ உரைத்த நீ கூறிய, இன்பாரும் சொல்லால் இன்பம் நிறைந்த (முதல் ஆறு அத்யாயங்களாகிற) வார்த்தையால், என் மோகம் எல்லாம் என்னுடைய மயக்கம் எலலாம், துவக்கி உடன் வாஸனையோடு, நில்லாதே என்னிடம் நில்லாமல், எனக்கு கழிந்தது எனக்குக் கழிந்துவிட்டது. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0