பகவத் கீதை வெண்பா

இங்கே குடாகேசா வென்னுடம்பி லோரிடத்தி
லங்கோர் சராசரங்க ளாகத்துத் – தங்குநெறி
தேறியே யெல்லாந் தெரியக்கா ணென்காண்பான்
வேறுதா னிச்சித்தாய் மிக்கு.  11.8

குடாகேசா

தூக்கத்தை வென்ற அர்ஜுனா

இங்கே என் உடம்பில் ஓர் இடத்தில்

இங்கு எனது ஓர் உருவில் ஒரு பகுதியில்,

அங்கு ஓர் சராசரங்கள்

உலகில் காணப்படும் அசைவனவும், அசையாதனவுமான அனைத்தும்,

ஆகத்து தங்கும் நெறி தேறியே

அதனுள் தங்கியிருக்கின்றன என்பதை அறுதியிட்டு,

எல்லாம் தெரிய காண

எல்லாவற்றையும் நன்கு காண்பாயாக,

வேறு தான் என காண்பான் மிக்கு இச்சித்தாய்

மேலும் வேறு எப்பொருளை நீ காண மிக விரும்புகிறாயோ, (அதையும் எனது ஓர் உருவில் ஒரு பகுதியில் காண்பாய்)

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top