பகவத் கீதை வெண்பா

இவ்வகை சொல்லி யிறையான யோகேச
னவ்வகையாற் பார்த்த னவன்காண – மெய்வகையா
லைசமெனு மவ்வடிவை யாங்கனைத்துங் காட்டினான்
றேசமரு மேன்மை சிறந்து.        11.10

இறையான யோகேசன்

ஸர்வேஶ்வரனாய குண விபூதிச் சேர்த்தியுடையவனான கண்ணன்,

இவ்வகை சொல்லி

இவ்வண்ணமாகச் சொல்லி,

அவ்வகையால்

தான் சொன்னபடியே,

பார்த்தன் அவன் காண

அந்த அர்ஜுனன் காணும்படியாக,

தேசு அமரும்

ஒளி மிகுந்திருப்பதாய்,

மேன்மை சிறந்து

பெருமையால்,

சிறப்புற்றதாய், ஐஶம் எனும் அவ்வடிவை

(ஈஶனான தனக்கேயுரியதாகையால்) ஐஶம் எனும் அந்த விஶ்வரூபத்தை,

ஆங்கு

அப்போர்க்களததில்,

அனைத்தும்

முழுவதும்,

மெய்வகையால் காட்டினான்

உள்ளபடி காட்டினான்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top