பகவத் கீதை வெண்பா

வானில் வளரிரவி யாயிரமா வந்தொருமித்
தான வொளியெழுவ தாமாகிற் – றானப்
பெரியோன் வடிவிற் பிறங்குமொளிக் கொக்கும்
பரிசா மெனலாம் பயின்று.       11.13

வானில் வளர் இரவி

ஆகாயத்தில் வளர்ந்து வரும் ஸூர்யகள்,

ஆயிரமா வந்து

ஆயிரக்கணக்கில் வந்து,

ஒருமித்து ஆன ஒளி எழுவதாமாகில் தான்

ஒரே ஸமயத்தில் அவற்றின் ஒளி எழுவதாயிருந்தால்,

அப்பெரியோன் வடிவில்

அம்மஹாபுருஷனின் திருமேனியில்,

பயின்று பிறங்கும் ஒளிக்கு

பொருந்தி பிரகாசிக்கும் ஒளிக்கு

ஒக்கும் பரிசாம் எனலாம்

ஒப்பான பெருமையுடையது என்று கூறலாம்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top