பகவத் கீதை வெண்பா

ஆதிநடு வந்தமிலா னங்கனந்த வீரியனாய்
மீதிதனிற் றோளனந்த மேவியகண் – சோதிமதி
தீமுகமா யெல்லாமுன் றேசாற் றபிப்பிக்க
யாமுகமாய்க் காண்பனுனை யாங்கு.       11.20

ஆதி நடு அந்தம் இலா

முதல் நடு முடிவு இல்லாதவனாய்,

அங்கு

போர்க்களத்தில்,

அனந்த வீரியனாய்

எல்லையற்ற வீரியத்தை உடையவனாய்,

இதனில்

தன் திருமேனியில்,

மீது தோள் அனந்தம் மேவிய

வலிமை மிக்க தோள்கள் கணக்கற்றவை உடையவனாய்,

கண் சோதி மதி

ஸூர்யன்போல சுடுவதாகவும், சந்த்ரன்போல குளிர்ந்து இருக்கும் திருக்கண்களையுடையவனாய்,

தீ முகமாய்

கொழுந்துவிட்டு எரியும் ஊழிக்காலத் தீயைப் போல அனைத்தையும் விழுங்கும் வாய்களை உடையவனாய்,

உன் தேசால் எல்லாம் தபிப்பிக்க

தனது தேஜஸ்ஸாலே உலகனைத்தையும் கொதிப்படையச் செய்பவனான,

உனை

உன்னை,

ஆங்கு

அந்த விஶ்வரூபக்காட்சியில்,

யாம் முகமாய் காண்பன்

நான் எனது முகத்தாலே காண்கிறேன்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top