பகவத் கீதை வெண்பா

ஆங்கவர்க ளுன்ற னதிபயமாம் வல்லெயிற்
றோங்கு முகங்களிடை யுற்றுவிரைந் – தீங்கடைவர்
நின்சினத்தாற் பல்லிடையி னின்றுசிலர் பல்பொடியா
மன்சிரத்தாற் றோன்றுவர்கண் மற்று.         11.28

ஆங்கு அவர்கள் உன்தன்

அத்தகைய அவர்கள் உன்னுடைய

அதிபயமாம்

மிகவும் பயங்கரமாயிருக்கும்

வல்எயிற்று

உறுதியான பற்களையுடைய

ஓங்கு முகங்களிடை உற்று

உயர நிற்கும் வாய்களுக்குள்ளே நுழைந்து

ஈங்கு விரைந்து அடைவர்

அவற்றின் உள்ளே விரைவாகச் செல்வர்

மற்று நின் சினத்தால் சிலர்

மேலும் உனது கோபத்தாலே இவர்களில் சிலர்

பல் இடையில் நின்று

பற்களுக்கு நடுவில் தொங்குகின்றவர்களாய்,

பல்பொடியாம் மன் சிரத்தால் தோன்றுவர்கள்

தங்களுடைய சிறந்த தலைகள் பல பொடிகளாக ஆக்கப்படடுக் காட்சியளிக்கிறார்கள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top