பகவத் கீதை வெண்பா

மத்யம ஷட்கத்தின் ஸாரப்பொருள்

பத்திவகை யாங்கறிந்து சேரப் பரன்பெருமை
யெத்தியலு மாய நித் ததுவடிவி – லொத்தியலக
காட்டியது பத்திநலங் கணணன் றருகீதை
மாட்டிடையா றோத்தின வகை .        12.19B

கண்ணன்தரு கீதை மாட்டு

கண்ணன் அருளிச்செய்த கீதையில்

இடை ஆறு ஓத்தின் வகை

நடுவிலுள்ள ஆறத்தியாயங்கள்

எத்தியலுமாய்

கர்மயோகம் முழுவதையும அனுஷ்டி,த்து

நிததது வடிவிலொத்தியல

நித்யமான ஆதமஸ்வரூபத்தை நேரே காண்பதுபோன்ற காட்சியைக் கண்டு

பத்திவகை ஆங்கு அறிந்து

பக்தியோகத்தின தன்மைகளை அதன்பின் அறிந்து

பரன் பெருமை சேர

பரம்பொருளின் அனுபவத்தைப் பெறுவதற்காக

பத்திநலம்

பக்தியோகத்தின் பெருமைகளை

காட்டியது

விளக்கிற்று. 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top