பகவத் கீதை வெண்பா சத்துவ ம தின்பந் தனிற்றுவக்குந் தானிரசத் தொத்தியலுங் கன்மந் துவக்குவிக்கு – மைத்தும் மன்னறிவு தன்னை மறைத்திட்டோர்ப் பின்மையினிற் றுன்னமிகத் தான்றுவக்குஞ் சூழ்ந்து. 14 . 9 சத்துவமது (முற்கூறிய மூன்றுகுணங்களில்) அந்த ஸத்வகுணமானது இன்பம் தனில் துவக்கும் சுகத்தில் (முக்கியமாகப்) பற்றைவிளைக்கிறது; தொத்து இயலும் முயற்சியை விளைக்கும் இரசம் தான் ரஜோகுணமானது கன்மம் துவக்கு விக்கும் கர்மத்தில் (முக்கியமாகப்) பற்றைவிளைக்கிறது; மைத்தும் தான் (உள்ளிருளை விளைக்கும்) தமோகுணமானது மன் அறிவுதன்னை மறைத்திட்டு பொருள்களை உள்ளபடி அறியும் அறிவை மறைத்து சூழ்ந்து (ஜீவனைச் சூழ்ந்து நின்று) துன்னம் மிக ஓர்ப்பின்மையினில் மிகுதியான கவனமின்மையில் துவக்கும் (முக்கியமாகப்) பற்றை விளைக்கும். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0