பகவத் கீதை வெண்பா எல்லாப் புலனியல்வு மேய்ந்தே விளங்குமதாயெல்லாப் புலனியல்வு மில்லையா – யெல்லாந்தரிக்குமொரு தத்தற்றுச் சார்குணமூன் றின்றிவிரித்ததனைத் துய்க்கும் மிக. 13.14 எல்லா புலன் இயல்வும் ஏய்ந்தே விளங்குமதாய் எல்லா இந்த்ரியங்களின் செயல்களாலே விஷயங்களை அறிய வல்லதாய் எல்லா புலன் இயல்வும் இல்லையாய் (இயல்வான நிலையில்) எல்லா இந்த்ரியங்களுமில்லாமலே அனைத்தையும் அறியவல்லதாய் ஒரு தத்து அற்று (இயற்கையில்) தேவர்கள் முதலான தேஹங்களில் தொடர்பற்று எல்லாம் தரிக்கும் தேவர் முதலான தேஹங்களையும் தரிக்கவல்லது சார் குணம் மூன்று இன்றி (இயற்கையில்) ப்ரக்ருதியைச் சார்ந்திருக்கும் ஸத்வம் முதலான மூன்று குணமில்லாததாய் அதனை விரித்து மிக துய்க்கும் அம் மூனறு குணங்களையும விரிவாகவும் நன்றாகவும் அனுப விக்கவல்லதாயிருப்பது Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0