பகவத் கீதை வெண்பா பூதங்க ளுக்குள் புறம்புமாய்த் தானின்றுமீதங் கியல்வதுமாய் மேவியே – போதத்துநுண்ணிமையி னான்மிகவு நோக்கரிதாய்த் தூரத்துமண்ணிமையி னாலருகு மாம். 13.15 பூதங்களுக்கு உள் புறம்புமாய் பூமி முதலான ஐம்பெரும் பூதங்களின் உள்ளே இருப்பதாகவும் அவற்றை விட்டு வெளியேயிருப்பதாகவும் தான் நின்று மீது அங்கு இயல்வதுமாய் (இயற்கையில் ) அசையாததாய் தேஹத்தோடு கூடியிருக்கையில் அசைவதாய் நுண்ணிமையினால் மிகவும் நுண்ணியதாயிருக்கையால் மேவியே தம் ஸரீரத்தில் இருந்தபோதிலும் போதத்து மிகவும் நோக்கரிதாய் (ஸம்ஸாரிகளால்) தம் ஸரீரத்தைக்காட்டிலும் வேறுபட்டதாக உள்ளபடி மிகவும் அறியத்தகாததாய் தூரத்தும் ஆம் (அமாநித்வம் முதலான குணங்களற்றவர்களுக்கும் அக்குணங்களுக்கு மாறான குணங்களையுடையவர்களுக்கும் தம் ஸரீரத்திலிருந்தபோதிலும்) வெகுதூரத்திலுள்ளதாகும் அண்ணிமையினால் (அமாநித்வம் முதலான குணங்களை யுடையவர்களின்) நெஞ்சுக்குக் காட்சியளிக்கையாலே அருகும் ஆம் (அவர்களுக்கு) அருகேயும் உள்ளது Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0