பகவத் கீதை வெண்பா

வேறுபா டற்றவது வேற்றுமைசேர் பூதத்து
வேறுபா டுற்றதுபோன் மிக்கிருக்கும் – கூறுபா
டுற்றபொரு டான்பரிக்கு முண்ணுமுண் டாக்குமென
மற்றறியத் தக்கதது வாய்ந்து.       13.16

வேற்றுமைசேர் பூதத்து

(தேவர் மனிதர் முதலான) வேறுபட்ட எல்லா தேஹங்களிலும் (இருந்தபோதிலும்)

வேறுபாடு அற்ற அது

( அறிபவனாகவேயிருக்கையால்) வேறுபாடு இல்லாமலிருக்கும் அந்த ஆத்ம ஸ்வரூபம்

மிக்கு வேறுபாடு உற்றது போல் இருக்கும்

(அறிவற்றவர்களுக்கு ) தேவர் முதலான மிகுந்த வேற்றுமைகளை உடையது போல இருக்கும்

மற்று

மேலும்

கூறுபாடு உற்ற பொருள்தான் பரிக்கும் என

(தேவர் முதலான) வகைகளை உடைய சரீரங்களைத் தாங்கும் என்னும் காரணத்தாலும்

உண்ணும் என

(பூதங்களாலான உணவு முதலானவற்றை) உண்ணும என்னும் காரணத்தாலும்

உண்டாக்கும் என

ரேதஸ் கர்ப்பம் முதலான பரிணாமங்களை உண்டாக்கும் என்னும் காரணத்தாலும்

அது வாய்ந்து அறியத் தக்கது

அந்த ஆத்மஸ்வரூடம் ஸரீரங்கள் முதலானவற்றைக் காட்டிலும்) வேறுபட்டதாக அறியத்தக்கது

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top