பகவத் கீதை வெண்பா இவ்வளவிற் பார்த்த னியம்பினா னிங்கிறைவா வவ்வகைசேர் முக்குணத்தை யாங்கன்னோன் – எவ்வகையிற் சேருமடை யாளத்தன் செய்தொழிலே தெங்ஙனே சீருடனித் தைக்கடப்பான் செப்பு. 14 . 21 இவ்வளவில் இந்த சமயத்தில், பார்த்தன் இயம்பினான் அர்ஜுனன் (பின்வருமாறு) கூறினான். இறைவா ஸர்வேஶ்வரனே! இங்கு அவ்வகைசேர் முக்குணத்தை இவ்வுலகில் முற்கூறியபடி உடலோடு சேர்ந்திருக்கும் மூன்று குணங்களையும், ஆங்கு அன்னோன் முன் ஶ்லோகத்தில் சொன்னபடி கடந்து நிற்பவன், எவ்வகையில் சேரும் அடையாளத்தன் எந்த உள்ளிலக்கணங்களை உடையவனாக இருக்கிறான்? செய்தொழில் ஏது எந்த வெளி அடையாளங்களை உடையவனாயிருக்கிறான்? எங்ஙனே சீருடன் இத்தைக் கடப்பான் அவன் சிறப்பாக இம் முக்குணங்களை எப்படிக்கடப்பான்? செப்பு இதை எனக்குச் சொல்லுவாயாக. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0