பகவத் கீதை வெண்பா

இவ்வுடம்பின் மேலாம் புருடன்கண் டேய்ந்திசைவா 
னவ்வுடம்பு தாங்கி யதிற்றுய்ப்பான் – செவ்வியதிற்
றங்கியபே ரீசனாய்த் தான்பரம வான்மாவா
யிங்கியம்பப் பட்டா னிவன்.           13.22

இவ்வுடம்பில்

இந்த தேஹத்தில் (இருக்கும்)

மேலாம் புருடன் இவன்

(அளவற்ற ஜ்ஞாநஸக்திகளை உடையவனாயிருக்கும்) பெருமை பெற்ற இந்த ஜீவன்

கண்டு ஏய்ந்து

தேஹத்தைக் கண்டு செயல் புரிபவனாய்

இசைவான்

(தேஹம் செயல்படுவதை) அநுஸந்திப்பவனாய்

அவ்வுடம்பு தாங்கி

அந்தவுடம்பைத் தாங்குபவனாய்

அதில் துய்ப்பான்

தேஹத்தின் செயல்களால் விளையும் இன்ப துன்பங்களை அநுபவிப்பவனாய்

செவ்வியதில் தங்கிய பேர் ஈசனாய்

இந்திரியங்கள் மனம் ஆகியவற்றால் சிறப்புப் பெற்றிருக்கும் அந்த தேஹத்தில் தங்கிய பெரிய ஈஸ்வரனாய் (நியந்தாவாய்)

தான் பரம ஆன்மாவாய்

(தேஹம் இந்த்ரியம் மனம் ஆகியவற்றைக் காட்டிலும்) தானே பெரிய ஆத்மாவாக

இங்கு இயம்பப்பட்டான்

ஆத்ம ஞானிகளின் திரளில் சொல்லப்பட்டான் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top