பகவத் கீதை வெண்பா இந்தப் புருடனையு மிந்த வசித்தினையுமந்தக் குணங்களுட னாய்ந்தறிவா—னெந்தவவன்எவ்வாறு மேவு மியல்பாற் றிரிந்திடினுமிவ்வா றவன்பிறவா னிங்கு 13.23 இந்தப்புருடனையும் முற்கூறிய இந்த ஜீவனையும் இந்த அசித்தினையும் இந்த அறிவற்ற ப்ரக்ருதியையும் அந்த குணங்களுடன் அந்த ஸத்வம் முதலான குணங்களோடு கூட எந்த அவன் ஆய்ந்து அறிவான் எவன் உள்ளபடி பகுத்தறிகிறானோ அவன் அந்த ஜீவன் எவ்வாறு மேவும் இயல்பால் திரிந்திடினும் தேவர் மனிதர் முதலான எந்த தேஹத்தில் கட்டுண்டு திரிந்தாலும் இங்கு இவ்வுலகில் இவ்வாறு அவன் பிறவான் இதுவரை பிறந்ததுபோல அவன் மறுபடியும் பிறவி எடுக்கமாட்டான் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0