பகவத் கீதை வெண்பா

கிட்டாத காமத்தை யுன்னியது கிட்டும்வினைப்
பட்டாங் கறிவின்றிப் பாவத்தா – லிட்டபொருள்
வாங்கிமதம் டம்பஞ்சேர் மானமுட னிங்குழல்வார்
தீங்கியற்று மல்விரதஞ் சேர்ந்து.        16.10

(ஆஸுரப்ரக்ருதிகள்) கிட்டாத காமத்தை உன்னி

நிறைவேற்ற அரிதான காமத்தை ஆசைப்பட்டு

அது கிட்டும் வினைப்பட்டு

அதை நிறைவேற்றும் செயல்களைத் தொடங்க எண்ணி

அறிவின்றி

அறிவில்லாமல்

ஆங்கு

அதற்காக

பாவத்தால் இட்டபொருள் வாங்கி

அநியாய வழியில் தேடப்பட்ட பொருள்களைப்

பெற்று

தீங்கு இயற்றும் அல்விரதம் சேர்ந்து

தீங்கை விளைப்பனவாய் சாஸ்திரங்களில் விதிக்கப்படாதவையான விரதங்களை அநுஷ்டித்து

மதம் டம்பம் சேர் மானமுடன்

மதத்தோடும் டம்பத்தோடும் சேர்ந்த தீய அபிமானத்தோடு

இங்கு உழல்வார்

இவ்வுலகில் செயல்படுகிறார்கள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top