பகவத் கீதை வெண்பா

காமஞ்சே ராக்கை சதங்களாற் கட்டுண்டு
சேமமுட காமக் குரோதத்துக் கைவளர்ந்து — சேமமுட
னாங்கதனைத் துய்ப்பா னனியாய வத்தத்தை
யோங்கிமிகத் தாஞ்சேர்ப்ப ருற்று.        16.12

(ஆஸுரப்ரக்ருதிகள்) காமம் சேர் ஆக்கை சதங்களால் கட்டுண்டு

ஆசைகள் என்னும் நூற்றுக்கணக்கான கயிறுகளாலே கட்டப்பட்டவர்களாய்

காமக்குரோதத்துக் கைவளர்ந்து

காமத்திலும் கோபத்திலுமே வளர்ச்சி பெற்ற வர்களாய்

நிம்மதியுடன் இவ்வுலகிலேயே காமத்தை அநுபவிப்பதற்காக

நிம்மதியுடன் இவ்வுலகிலேயே காமத்தை அநுபவிப்பதற்காக

அநியாய அத்தத்தை

தவறான வழியில் வந்த பொருளை

உற்று

விரும்பி

ஓங்கி மிகத் தாம் சேர்ப்பர்

மிகவும் அதிகமாகத் தாமே தேடுவர்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top