பகவத் கீதை வெண்பா

ஆங்கென்னைத் தான்வெறுத்த வந்த நராதமரை
யீங்குழலு மிப்பவத்தி லென்றுநான் – றீங்குழலு
மாசுரமாம் யோனி யவைதன் னிடையெய்த
மாசுறவே தள்ளுவேன் மற்று.          16.18

ஆங்கு

முற்கூறியபடி

என்னைத்தான்

(பேருபகாரம் செய்யும்) என்னையே

வெறுத்த

துவேஷிக்கும்

அந்த நராதமரை

அந்த மனிசரிற் கடையானவரை

ஈங்கு உழலும் இப்பவத்தில்

(பிறப்பு இறப்பு மூப்பு முதலானவற்றில்) உழலும் இந்தப் பிறவிகளில்

மற்று

அதிலும்

தீங்கு உழலும் ஆசுரமாம் யோனி அவை தன்னிடை மாசுறவே எய்த

தீமையிலேயே உழன்றுகொண்டிருக்கும் தாழ்ந்த ஆஸுரப்பிறவிகளையே அடையும்படி

நான்

நான்

என்றும் தள்ளுவேன்

இடைவிடாமல் தள்ளுவேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top