பகவத் கீதை வெண்பா

உற்றுநிகழ்ந் தாசுரமாம் யோனிகளிற் பல்பிறப்பில்
முற்றுமறி வின்றியே மூடராய்க் – கொற்றவனே
யென்னை யடையாதே யீங்கதனிற் றாழ்ந்தகதி
தன்னடைவ ரென்றுந் தளர்ந்து.           16.19

கொற்றவனே

அரசனே!

ஆசுரமாம் யோனிகளில் உற்று நிகழ்ந்து

(முன் ஸ்லோகத்தில் சொன்னபடி) ஆஸுரப்பிறவிகளை அடைந்த இவர்கள்

பல்பிறப்பில்

மேன்மேலும் வரும் ஜன்மங்கள் தோறும்

முற்றும் அறிவின்றியே மூடராய்

அறிவின்மை முற்றும் வளரப்பெற்ற முட்டாள்களாய்

என்னை அடையாதே

என்னைப்பற்றிய அறிவை அடையாமலேயே

ஈங்கு

இவ்வுலகில்

அதனில்

அந்தந்த ஜன்மங்களைக்காட்டிலும்

தளர்ந்து

தளர்ச்சியுற்று

என்றும்

எப்போதும்

தாழ்ந்த கதி தன்னடைவர்

தாழ்ந்த கதிகளைத் தாமே அடைவர்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top