பகவத் கீதை வெண்பா

சன்யாசங் கன்மத்திற் சாருந் தியாகத்தில்
முன்யான் பிரிவொருமை முற்றறியேன் – பின்பின்னும்
தோன்றாது நீயிதனைச் சொல்லென்றான் பார்த்தனதற்
கேன்றங் குரைத்தா னிறை.
     18.1

கன்மத்தில் சாரும்

(மோக்ஷஸாதநமான) கர்மத்தோடு சேர்ந்திருக்கும்

சன்யாசம் தியாகத்தில்

ஸன்யாஸம் த்யாகம் ஆகிய இவ்விரண்டின்

பிரிவு ஒருமை

வேற்றுமையையோ ஐக்கியத்தையோ

யான்

நான்

முன் முற்று அறியேன்

முதலில் முழுவதும் அறியமாட்டேன்

பின் பின்னும் தோன்றாது

பல்வாறாக ஆராய்ந்த பின்னும் (இவற்றின் ஸ்வரூபம்) எனக்கு விளங்கவில்லை

நீ

நீ

இதனைச்சொல்

இதை விளக்குவாய்

என்றான் பார்த்தன்

என்று குந்திமகனான அர்ஜுனன் கூறினான்

அதற்கு ஏன்று

அக்கேள்வியை ஏற்றுக்கொண்டு

அங்கு

அவ்விடத்திலேயே

இறை உரைத்தான்

ஸர்வேஸ்வரனான கண்ணன் பதிலுரைத்தான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top