பகவத் கீதை வெண்பா

பகவத் கீதை வெண்பா
(பதினேழாம் அத்தியாயத்தின் ஸாரத்தைக் கூறும் பாசுரம்)

மேவு குணங்களினால் வேறாம் கருமங்கள்
பாவு சுருதிப் பயில்வகையே – சேவையுறும்
பாங்குரைத்த கீதைப் பதினேழா மோத்ததனை
யீங்குரைத்தோ மிப்பொருளா லேய்ந்து.        17.29A

மேவு குணங்களினால்

(ஸத்வம் ரஜஸ் தமஸ் என்னும்) ஸரீரத்தில் உள்ள குணங்களினால்

வேறாம் கருமங்கள்

(ஸாத்விகம், ராஜஸம், தாமஸம் என்று) வேறுபட்டிருக்கும் ஸாஸ்த்ரத்தை ஒட்டிய கர்மங்களையும்

பாவு சுருதிப் பயில் வகையே சேவை உறும் பாங்கு

சிறப்புடைய வேதத்தில் சொல்லப்பட்ட கர்மங்களுக்கு (ஓம் தத் ஸத் என்னும்) தகுந்த லக்ஷணமும்

உரைத்த

கூறிய

கீதை பதினேழாம் ஓத்து அதனை

கீதையின் பதினேழாவது அத்தியாயத்தை

இப்பொருளால் ஏய்ந்து

இப்படிப் பொருளோடு பொருந்தவிட்டு

ஈங்கு உரைத்தோம்

இங்கு (வெண்பாவினால்) கூறினோம்.

வாதிகேஸரி ஜீயர் அருளிய பகவத்கீதை வெண்பாவில் பதினேழாம் அத்தியாயம் முற்றிற்று.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top