பகவத் கீதை வெண்பா

செய்யுங் கருமமெல்லாஞ் சித்திக்க நீவிசையா
வுய்யு மதியறுதி யுற்றுணர்ந்த – வைவகைசேர்
காரணங்க ளென்பாற் கருத்தமர்ந்து கேட்டறிநீ
யாரணங்கள் சொல்லு மது.         18.13

விசையா

அர்ஜுனா!

ஆரணங்கள் சொல்லுமது

வேதங்களால் சொல்லப்படுவதாய்

உய்யும்மதி அறுதி

உய்விக்கச்செய்வதான அறிவினால் தேறும் நிர்ணயத்தில்

நீ செய்யும் கருமமெல்லாம் சித்திக்க

(ஜீவனான ) நீ செய்யும் கர்மங்கள் அனைத்தும் உண்டாவதற்கு

உற்று உணர்ந்த

நன்கு அறியப்பட்ட

ஐவகை சேர் காரணங்கள்

ஐந்து வகைப்பட்ட காரணங்களை

என்பால்

என்னிடம்

நீ

நீ

கருத்து அமர்ந்து

கவனத்துடன்

கேட்டு அறி

கேட்டு அறிவாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top