பகவத் கீதை வெண்பா

தன்மமு மற்றைய தன்மமுங் காரியமும்
புன்மைய காரியமும் போக்குத்தா-நன்மையுறக்
காணும் வகையன்றிக் காணலுறும் புத்திதான்
பேணு மிடைக்குணத்தைப் பேர்ந்து.       18.31

தன்மமும் மற்றை அதன்மமும்

(முற்கூறிய இருவகைப்பட்ட)தர்மத்தையும் அதற்கு நேர்மாறான அதர்மத்தையும்

தாம் போக்கு காரியமும் புன்மை அகாரியமும்

(அவற்றில் ஊன்றி நிற்பவர்கள்) தாம் செய்யத்தக்கதையும் செய்யத் தகாத தாழ்ந்த செயலையும்

நன்மையுறக் காணும் வகையன்றி காணலுறும் புத்திதான்

உள்ளபடி காணாமல் தவ றாகக் காணும் புத்தியானது

பேர்ந்து

ஸாத்விக புத்தியிலும் வேறுபட்டு

இடைக்குணத்தைப் பேணும்

முக்குணங்களில் இடைப்பட்டதான ரஜோகுணத்தால் உண்டானதாயிருக்கும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top