பகவத் கீதை வெண்பா தன்மகா மார்த்தங்க டன்னையே யாதினாற் புன்மைசேர் தன்பயனாற் புந்தித்து- வன்மைசேர்சங்க முடனே தரிக்கின்றா னத்திருதியங்க விடைக்குணத்த தாம். 18.34 தன்ம காமார்த்தங்கள் தன்னையே அறம் இன்பம் பொருள் என்னும் மூன்று புருஷார்த்தங்களுக்கு ஸாதநமான செயல்களை புன்மை சேர் தன் பயனால் புந்தித்து தனக்கான தாழ்ந்த பயன்களைக் கருதி வன்மைசேர் சங்கமுடனே வலிமைமிக்க பற்றுடன் யாதினால் தரிக்கின்றான் எந்த த்ருதியினாலே தரிக்கின்றானோ அத் திருதி அந்த த்ருதி அங்கு அவ்விடைக்குணத்ததாம் முக்குணங்களில் இடைக்குணமான ரஜோகுணத்தினால் உண்டானதாகும். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0